’12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு’..திருப்பூர் முதலிடம், கோவை மூன்றாமிடம்; முழு விவரம் உள்ளே!

 

’12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு’..திருப்பூர் முதலிடம், கோவை மூன்றாமிடம்; முழு விவரம் உள்ளே!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் படி மாண்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் எல்லா பணிகளும் நிறைவடைந்து இன்று காலை 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

’12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு’..திருப்பூர் முதலிடம், கோவை மூன்றாமிடம்; முழு விவரம் உள்ளே!

இந்த ஆண்டு தேர்வு எழுதிய 7,79,931 மாணவர்களில் 7,20,209 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாகவும் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேர்ச்சி விகிதம் 1.04% அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும் 96.99% தேர்ச்சியுடன் ஈரோடு இரண்டாம் இடத்தையும் 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பொதுத்தேர்வில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன. அதே போல அரசுப் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 85.94% ஆகவும், அரசு உதவிபெறும் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 94.30% ஆகவும், மெட்ரிக் பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் 98.70% ஆகவும் உள்ளது.

மேலும், மொழிப்பாடத்தில் 97.53% தேர்ச்சியும், ஆங்கிலத்தில் 96.16% தேர்ச்சியும், இயற்பியலில் 95.94%, வேதியியலில் 95.82%, உயிரியலில் 95.14%, கணிதத்தில் 96.31% தேர்ச்சியும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.