ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?

 

ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?

கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பள்ளிகளை திறக்க முடியாத சூழல் நிலவியது. இதனால் 9 ,10 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளும் 11ஆம் வகுப்பு எஞ்சியிருந்த பொதுத்தேர்வுளும் ரத்து செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டதை போல, இந்த ஆண்டு ரத்து செய்யப்படாது என திட்டவட்டமாக தெரிவித்திருந்த அரசு தேர்வுக்கு தயாராகுமாறு மாணவர்களை அறிவுறுத்தியது.

ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?

அதன் படி, மாணவர்களும் பொதுத்தேர்வை எதிர்கொள்ள தயாராகினர். 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான அட்டவணை வெளியிடப்பட்டது. இந்த சூழலில் தான் 9,10 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை ரத்து செய்து இன்ப அதிர்ச்சி கொடுத்தது தமிழக அரசு. பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டாலும் அவர்களுக்கு திறனறிவு தேர்வை நடத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

ஒத்திவைக்கப்படுகிறதா 12ம் வகுப்பு பொதுத்தேர்வு?

இதனிடையே, 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் திட்டமிட்டபடி மே 3-ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. தேர்வை எதிர்கொள்ள மாணவர்கள் சோகத்துடன் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிப்பதால் மாணவர்களின் நலன் கருதி தேர்வை ரத்து செய்யுமாறு பல தரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இன்று காலை முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது.

அக்கூட்டத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை வேறு தேதியில் நடத்தலாம் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.