பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து… மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

 

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து… மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதால் பொதுத் தேர்வுகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மாதங்கள் கடந்து கொண்டே செல்வதால் உடனடியாக முடிவு எடுக்குமாறு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியது. அதன் படி, சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதைத் தொடர்ந்து குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களும் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தன.

பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து… மாநில அரசு அதிரடி அறிவிப்பு!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது குறித்து கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. பெரும்பாலானோர் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வரும் நிலையில், கருத்துக் கேட்புக் கூட்டத்தில் வரும் முடிவுகளின் அடிப்படையில் பொதுத்தேர்வு முடிவு நடத்தப்படுமா? இல்லையா? என்ற அறிவிப்பு வெளியாகுமென பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அம்மாநிலத்தில் தேர்வுக்காக ஹால் டிக்கெட் வழங்கப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.