செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 

செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

திருச்சி

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவிலில் செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால் பிளஸ் 2 மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருச்சி மாவட்டம் திருவானைக்கோவில் திம்மராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன். கூலி தொழிலாளி. இவரது மனைவி அகிலா. இவர்களது மகள் பிரியதர்ஷினி (17). இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்து வந்த பிரியதர்ஷினி, எந்த வித வேலையும் செய்யாமல் தொடர்ந்து செல்போன் பயன்படுத்தி வந்துள்ளார்.

செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

இதனால் தாய் அகிலா செல்போன் பேசியதை கண்டித்து, அவரிடம் இருந்து போனை பிடுங்கி வைத்துள்ளார். இதனை அடுத்து, பிரியதர்ஷினி தாயாரிடம் செல்போனை திரும்ப தரும்படி பலமுறை கேட்டுள்ளார். ஆனால் அகிலா தர மறுத்துவிட்டார். இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தகவலின் பேரில் ஶ்ரீரங்கம் போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஶ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். செல்போன் பேசியதை தாய் கண்டித்ததால், பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருவானைகோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.