12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

 

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தமிழ்நாட்டில் +2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக 2020-21 கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. மாணவர்களுக்கு மதிப்பெண்கள், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 பாடங்களின் சராசரி மதிப்பெண்ணில் 50%, 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணில் இருந்து 20% மதிப்பெண், 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு அக மதிப்பீட்டில் இருந்து 30% மதிப்பெண் ஆகியவை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்ணாக கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறது!

இந்நிலையில் 2020-21-ம் கல்வியாண்டிற்கான 12ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கு வெளியாகிறது . சென்னை டிபிஐ வளாகத்தில் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று வெளியிடுகிறார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ். மாணவர்களது பதிவெண், பிறந்ததேதியை பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in-இல் அறியலாம்.