12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

 

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன் படி மாண்வர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கும் எல்லா பணிகளும் நிறைவடைந்து கடந்த 16 ஆம் தேதி 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகின.

இந்நிலையில் ஜூலை 24 முதல் 30ஆம் தேதிவரை மதிப்பெண் சான்றிதழ்களை பெறுவதற்கான கட்டுப்பாட்டு விதிமுறைகள் வெளியிடப்பட்டன. ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 20 மாணவர்கள் மட்டுமே வரவழைக்கப்பட்டு சான்றிதழ் வழங்க வேண்டுமென பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மாணவர்கள் அனைவரும் மாஸ்க் அணிந்திருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஜூலை 24 ஆம் தேதிக்கு முன்பாக பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினியால் சுத்தப்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 24 முதல் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்!

கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மற்றும் பயணம் செய்து தனிமைபடுத்தப்பட்டுள்ளவர்கள் கட்டுப்பாட்டு காலம் முடிந்த பின்னர் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளியை கடைபிடிக்கும் வண்ணம் வரிசையில் நிற்பதற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும், மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் ஆசிரியர்கள் கையுறை அணிந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் ஒன்று கூடுதலை தவிர்க்க வேண்டும், கழிவறைகளை சுத்தமாக வைத்திருப்பதுடன் கைகளை சோப் மற்றும் தண்ணீர் கொண்டு கழுவ வசதிகள் செய்ய வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகத்திற்கு பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தியுள்ளது.