“பாகுபாடின்றி அனைவருக்கும்” – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

“பாகுபாடின்றி அனைவருக்கும்” – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

சென்ற ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வுகள் நடந்துமுடிந்த பின்பு தான் கொரோனா பரவல் ஆரம்பித்தது. அதனால் மத்திய, மாநில அரசுகளுக்கு எந்தக் குழப்பமும் எழவில்லை. ஆனால் இம்முறை சரியாக மார்ச் மாதத்தில் தான் கொரோனா இரண்டாம் அலை உச்சம் பெற்றது. இதனால் மாணவர்களுக்கு எப்படி தேர்வு நடத்துவது என குழப்பம் உண்டானது. 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த முடியாததாலும், மூன்றாம் அலை வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாலும் சிபிஎஸ்இ தேர்வு ரத்து செய்யப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

“பாகுபாடின்றி அனைவருக்கும்” – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

அதற்குப் பிறகு பல்வேறு மாநிலங்கள் மாநிலக் கல்வியில் 12ஆம் வகுப்பு தேர்வை ரத்துசெய்ய முடிவுசெய்தன. தமிழ்நாட்டில் பல்வேறு கட்ட ஆலோசனை, கருத்துக்கேட்புக்குப் பிறகு முதலமைச்சர் ஸ்டாலின் ரத்து செய்தார். தேர்வு ரத்து செய்யப்பட்டாலும் மிகப் பெரிய சவால் காத்திருக்கிறது. அது தான் மதிப்பெண்கள் கணக்கிடும் முறை. யாருக்கும் எந்தவித குழப்பமும் ஏற்படுத்தாத கணக்கிடும் முறையை உருவாக்க வேண்டும் என்பதே மாணவர்கள், பெற்றோரின் வேண்டுகோளாக இருக்கிறது.

“பாகுபாடின்றி அனைவருக்கும்” – 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நற்செய்தி சொன்ன அமைச்சர் அன்பில் மகேஷ்!

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், “10ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களுக்கு மதிப்பெண் அளிப்பது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள், கருத்துகள் வரப் பெறுகின்றன. சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் மதிப்பெண் கணக்கீடு செய்யப்படும் அடிப்படையில் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு நன்றாகப் படிப்பவர்கள் உட்பட அனைத்து நிலை மாணவர்களும் திருப்தி அடையும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்”