ஆப்பிள் ஐபோன் 12க்கு புதிய சார்ஜர் – சியோமி அறிமுகம்!

 

ஆப்பிள் ஐபோன் 12க்கு புதிய சார்ஜர் – சியோமி அறிமுகம்!

ஆப்பிள் ஐபோன் 12 ஐ சார்ஜ் செய்திட உதவும் புதிய 20வாட்ஸ் யுஎஸ்பி டைப் சி சார்ஜரைசியோமி நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 12, கடந்த மாதம் அறிமுகமானது. ஆனால் யாரும்எதிர்பார்க்காத வகையில் போனுடன் பாக்ஸில் சார்ஜர் தரப்பட வில்லை என தெரிகிறது. இது வாடிகையாளர்கள் உள்பட பலருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.

ஆப்பிள் ஐபோன் 12க்கு புதிய சார்ஜர் – சியோமி அறிமுகம்!

சுற்றுச்சூழலை காரணம் காட்டி சார்ஜர் தவிர்க்கப்பட்டதாக ஆப்பிள் நிறுவனத்தின் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதனால் இந்த போனுக்கான சார்ஜர்கள் தனியாகவிற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் விதமாக சியோமி நிறுவனம், புதிதாக 20 வாட்ஸ் யுஎஸ்பி டைப் சி சார்ஜரை அறிமுகப்படுத்தி உள்ளது.

இந்த புதிய சார்ஜரை கொண்டு ஐபோன் 12 மட்டுமின்றி, ஐபோன் 11 மற்றும் ஐபோன் எஸ்இ (2020) ஆகியவற்றையும் சார்ஜ் செய்துகொள்ளலாம் என சியோமி தெரிவித்துள்ளது. இந்திய மதிப்பில் 400 ரூபாய்க்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த சார்ஜர் சீனாவில் நாளை ( நவம்பர் 03) முதல் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிகிறது.

ஆப்பிள் ஐபோன் 12க்கு புதிய சார்ஜர் – சியோமி அறிமுகம்!

இந்த புதிய சார்ஜரை கொண்டு ஐபோன் 11 ஐ 30 நிமிடங்களில் 45 சதவீதம் வரைசார்ஜ் செய்துவிடலாம் என தெரிகிறது. மேலும், அதிநவீன சர்கியூட் மற்றும் சிப்கள் அதில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இதனால் ஷாக் அடிக்காது என்பதுடன், அதிக வோல்டேஜ் பாதிப்பிலிருந்து இது முழுமையான பாதுகாப்பு கொண்டது என்றும் சியோமி தெரிவித்துள்ளது.

எஸ். முத்துக்குமார்