Home தமிழகம் கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி! வங்கி கணக்குகள் முடக்கமா?

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி! வங்கி கணக்குகள் முடக்கமா?

திருவாரூர், சேலம் மாவட்டத்தை அடுத்து கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், திருவாரூ, சேலம் மாவட்ட வங்கி கணக்குகள் முடக்கப்பட்டது போலவே கிருஷ்ணகிரியிலும் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி! வங்கி கணக்குகள் முடக்கமா?

விவசாயிகளுக்கு உதவுவதற்கான மத்திய அரசு கிசான் திட்டத்தை கொண்டு வந்தது. பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 தொகை மூன்று சம தவணைளாக, தலா ரூ.2000 என வழங்கப்படுகிறது. விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை செலுத்தப்பட்டு வருகிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி! வங்கி கணக்குகள் முடக்கமா?

இந்த திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோர் முறைகேடாக பயன்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் விவசாயிகள் அல்லாதோரும் சேர்க்கப்பட்டு பயனடைந்ததாக அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து நடந்த ஆய்வில் முறைகேடு நடந்ததது அம்பலமானது. இதை தொடர்ந்து பல்வேறு அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு, கிசான் திட்டத்தில் மோசடி செய்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து பணம் திரும்பப்பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் விவசாய திட்டத்தில் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை கோரி தமிழகம் முழுவதும் அனைத்து ஆட்சியர்களிடமும் பாஜகவினர் இன்று மனு அளித்தனர். கண்காணிப்பை விரிவுபடுத்தி உண்மையான விவசாயிகளுக்கு மட்டுமே உதவி தொகை கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தோர் முறைகேடாக இணைந்து பயன்பெற்றதாக தெரியவந்ததை அடுத்து, அம்மாவட்டத்தில் 1,600 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. மேலும், வேளாண் இணை இயக்குனர் தலைமையில் விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பிரதமரின் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக சேலம் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 700 பேரின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது .

தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. அதில் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 7,792 விவசாயிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5,976 விவசாயிகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் 1,816 விவசாயிகள் கன்னியாகுமரி, நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்திலும் கிசான் திட்டத்தில் மோசடி! வங்கி கணக்குகள் முடக்கமா?
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

டிஎன்பிஎல்- நெல்லை Vs திருப்பூர்! 3 விக்கெட் வித்தியாசத்தில் திருப்பூர் வெற்றி

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 10வது போட்டியில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐ ட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

ஆன்மீக குருவுக்கு சுற்றுச்சூழல் மீது ஏன் இவ்வளவு அக்கறை?- சத்குரு அதிரடி

ஈஷா சார்பில் 'உயிர் நோக்கம்' என்ற 3 நாள் யோகா நிகழ்ச்சி ஜூலை 23 முதல் 25 ஆம் தேதி வரை ஆன்லைனில் இலவசமாக நடைபெற்றது இதில் தமிழ்நாடு முழுவதும்...

17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக நிர்வாகி கைது

சேலம் அருகே 17 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய அதிமுக வார்டு கவுன்சிலர் போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்டுள்ளார்.
- Advertisment -
TopTamilNews