‘’நான் தமிழ் பேசும் இந்தியன்!’’ – யுவன்சங்கர் ராஜா பதிலடி

 

‘’நான் தமிழ் பேசும் இந்தியன்!’’ – யுவன்சங்கர் ராஜா பதிலடி

இந்தியர் என்றாலும் ‘இந்தி’யால் அவமானப்படுத்தப்படும் நிலைகண்டு வெகுண்டெழுந்திருக்கிறார்கள் இளைஞர்கள்.   இந்தி திணிப்பிற்கு எதிரான போராட்டத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

மும்மொழி திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அண்மையில் சென்னை விமான நிலையத்தில், திமுக எம்.பி. கனிமொழி இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியர்தானே சி.ஐ,எஸ்.எப். அதிகாரி கேட்டதால்,  இந்தியர் என்றால் எல்லோருக்கும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமா என்ற சர்ச்சை எழுந்தது.

‘’நான் தமிழ் பேசும் இந்தியன்!’’ – யுவன்சங்கர் ராஜா பதிலடி

இந்த சர்ச்சை ஓய்வதற்குள், இயக்குநர் வெற்றிமாறன் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார்.  கடந்த 2011ம் ஆண்டில் கனடா திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பி்யபோது,  டெல்லி விமான நிலையத்தில், இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர், வெற்றிமாறனிடம் இந்தியில் பேச,  இவர் தனக்கு இந்தி தெரியாது என்று சொல்ல, தீவிரவாதி என்று சொல்லி 45 நிமிசம் அதே இடத்தில் நிற்கவைத்து அவமானப்பத்திய சம்பவம் தற்போது தெரியவந்ததும், தமிழர்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.

‘’நான் தமிழ் பேசும் இந்தியன்!’’ – யுவன்சங்கர் ராஜா பதிலடி

மீண்டும் ஒரு இந்தி திணிப்பு, மீண்டும் ஒரு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்றாகிவிட்ட நிலையில்,  திரையுலகினர் பலரும் இந்திக்கு எதிரான டீ –சர்ட்டுகள் அணிந்து, அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.  அப்படங்கள் இணையதலங்களில் வைரலாகி வருகின்றன.

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா,  நான் தமிழ் பேசும் இந்தியன் என்று பொருள்படும் வகையில் “ஐ யம் எ தமிழ் பேசும் இந்தியன்” என்று அச்சிட்டுள்ள டீ –சர்ட் அணிந்த புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார். இதில் திருவள்ளுவர் படமும் இருக்கிறது.

இதே போல், நடிகர் சாந்தனுவும் டீ –சர்ட் அணிந்துள்ளார். அவரது மனைவியும், நடிகையுமான கீர்த்தி, ‘ இந்தி தெரியாது போடா’ என்று அச்சிடப்பட்ட டீ –சர்ட் அணிந்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.

மேலும், இந்தி தெரியது போங்கடா என்ற ஹேஸ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

  • கதிரவன்