“இனி சுத்த சைவ சாப்பாடுதான்” – ஏர் இந்தியா முடிவு

 

“இனி சுத்த சைவ சாப்பாடுதான்” – ஏர் இந்தியா முடிவு

வெளிநாட்டு விமானங்களில் பயணம் செய்வோருக்கு இனி சூடான சுத்த சைவ உணவை மட்டுமே வழங்க ஏர்இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதனால் அசைவ உணவு மற்றும் சிறப்பு உணவு என்பதே இனி சர்வதேச விமானங்களில் பரிமாறப்படாது என ஏர்இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.  அதேப்போல அனைத்து வகுப்பு பயணிகளுக்கும் ஒரே மாதிரியான மெனுவுடன் கூடிய உணவே வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மேலும் டீ உள்ளிட்ட  பானங்களை ஊற்றி பறிமாறாமல், குறிப்பிட்ட அளவில் ஒருமுறை பயன்படுத்தத்தக்க கப்புகளில் வழங்கிடவும் ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.

இதன் மூலம் விமானங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், பயணிகள் மற்றும் விமான ஊழியர்களுக்கு இடையே உரையாடல்களை குறைக்கவும் இத்தகையை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.  

“இனி சுத்த சைவ சாப்பாடுதான்” – ஏர் இந்தியா முடிவு

எஸ்.முத்துக்குமார்