ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்த அனுமதி!

 

ஓட்டல்களில் ஏசியை பயன்படுத்த அனுமதி!

ஓட்டல்களில் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் அமர்ந்து சாப்பிட ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது தளர்வின் அடுத்தகட்டமாக ஓட்டல்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில் ஏசியை பயன்படுத்தவும் அரசு அனுமதி அளித்துள்ளது.

மேலும், ஏசியை பயன்படுத்தும்போது நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக அலுவலகங்கள், ஓட்டல்கள், வீடுகளில் ஏசி இயக்க வேண்டாம் என்று அரசு அறிவுறுத்தி இருந்தது. கட்டுப்பாட்டின் தளர்வாக தற்போது ஏசியை பயன்படுத்த அனுமதித்துள்ளது.

தொடர் ஊரடங்கின் காரணமாக பல தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு போய்விட்டதால், ஆட்கள் குறைவின் காரணமாக, அமர்ந்து சாப்பிட அரசு அனுமதி அளித்தும், பல ஓட்டல்களில் அமர்ந்து சாப்பிடும் வசதியை ஏற்படுத்தாமல் பார்சல் சர்வீஸ் மட்டுமே செய்துகொண்டிருந்தனர். செலவினங்களை குறைப்பதற்காக பெரும்பாலான ஓட்டல்களில் இதே நடைமுறையை கடைப்பிடித்து வந்தனர்.

இந்நிலையில், ஏசியை பயன்படுத்தவும் அரசு அனுமதி அளித்துள்ள நிலையில், அமர்ந்து சாப்பிடும் வசதியை ஓட்டல் நிர்வாகங்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வந்திருக்கிறார்கள்.