கற்பகக் கட்டி! தமிழிசை வெளியிட்ட வீடியோ

 

கற்பகக் கட்டி! தமிழிசை வெளியிட்ட வீடியோ

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு விழிப்புணர்வு வீடியோவினை பதிவேற்றம் செய்துள்ளார்.

‘’இது ஊட்டச்சத்து மாதம். ஆகவே, ஊட்டச்சத்து உள்ள பொருட்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய மாதம். அதனால் நான் கையில் வைத்திருப்பது. கருப்பட்டி. இந்த கருப்பட்டியை கற்பகக் கட்டி என்று கூட சொல்லலாம். அந்த அளவிற்கு இதில் சத்து இருக்கிறது.

அந்த அளவுக்கு இதில் எலும்புகளை பலப்படுத்தும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது. இளைமையை தரும் ஆண்டி ஆக்சிடெண்டு இருக்கிறது. ரத்த சோகையை குணப்படுத்தும் இரும்பு சத்துஇருக்கிறது. அதனால், குழந்தைகளுக்கும் கர்ப்பிணிகளுக்கும் இதைக்கொடுத்தால் ரத்த சோகை இன்றி இருப்பார்கள். குழந்தைகளுக்கு சாக்லேட் கொடுப்பதற்கு பதிலாக கருப்பட்டி சாப்பிடக் கொடுத்தால் ஆரோக்கியமாக வளர்ந்திடுவார்கள்’’என்று அந்த வீடியோ மூலமாக மக்களுக்கு அறிவிறுத்தியுள்ளார்.

பனை மரத்திலிருந்து எடுக்கப்படும் பதநீரை காய்ச்சும் போது கருப்பட்டி கிடைக்கிறது. தென்மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகமாக உள்ளதால், அங்கு கருப்பட்டி தயாரிப்பு என்பது அதிகமாக இருக்கிறது.

தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி போன்ற ஆறு மாதங்களுக்கு மட்டுமே பதநீர் கிடைக்கிறது. அந்த சமயங்களில் கருப்பட்டி அதிகமாக செய்யப்படுகிறது.

சர்க்கை வந்த பின்னர் இந்த தலைமுறையினர் கருப்பட்டியின் மகத்துவத்தை உணராமல் போய்விட்டனர். ஆகவே, அது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தமிழிசை இந்த வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார்.