‘பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல்’ ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்!

‘பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல்’ ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்!

ஒரே நாளில் பத்திரப்பதிவின் மூலமாக அரசுக்கு ரூ.123.35 கோடி வருவாய் கிடைத்திருப்பதாக வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

‘பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல்’ ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த மார்ச் மாதத்தில் இருந்து அனைத்து அரசு அலுவலகங்களும் மூடப்பட்டது. அந்த வகையில் பத்திரப்பதிவு அலுவலகங்களும் மூடப்பட்டன. அதன் பிறகு ஏப்ரல் மாதம் அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது, பத்திரப்பதிவு அலுவலகம் மீண்டும் திறக்கப்பட்டது. கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளிக்கப்பட்டதால் பதிவுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்திருப்பதாகவும் கடந்த 6 மாதத்தில் ரூ.3,455 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் வணிகவரித்துறை அறிவித்திருந்தது.

‘பத்திரப்பதிவு துறையில் புதிய மைல்கல்’ ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய்!

இந்த நிலையில், தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.123.35 கோடிக்கு பத்திரப்பதிவு நடந்திருப்பதாக வணிகவரித்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஒரே நாளில் 20,307 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டதன் மூலமாக இந்த வருவாய் அரசுக்கு கிடைத்திருப்பதாகவும் இதுவரை இல்லாத அளவிற்கு பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.