122 கோடி கடனால்… திவாலானது ஆஸ்கர் பிலிம்ஸ்.. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ரவிச்சந்திரன்!

122 கோடி கடனால்… திவாலானது ஆஸ்கர் பிலிம்ஸ்.. மஞ்சள் நோட்டீஸ் கொடுத்த ரவிச்சந்திரன்!

கார்ப்பரேட் நிறுவனங்களின் வருகையை அடுத்து, தமிழ் திரையுலகில் பிரபலமான படத்தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் அடுத்தடுத்து தங்களது படத்தயாரிப்பை நிறுத்திக் கொள்கின்றன.. அல்லது அழிந்து வருகின்றன. இந்நிலையில், வானத்தைப்போல, பூவெல்லாம் உன் வாசம், ரோஜா கூட்டம், ரமணா, அந்நியன், பச்சைக்கிளி முத்துச்சரம், தசாவதாரம், வாரணம் ஆயிரம், வேலாயுதம், ஐ, மரியான், விஸ்வரூபம் 2 போன்ற பல ஹிட் படங்களை தயாரித்த பட நிறுவனமான ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு வெளியானது திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

oscar films

தனது பிரம்மாண்டமான படவெளியீட்டுக்கு பெயர் பெற்றிருந்த ஆஸ்கர் பிலிம்ஸ், கமல் நடித்த ‘தசாவதாரம்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு ஜாக்கிசானை அழைத்து அனைவரின் புருவங்களையும் உயர செய்தது. விஜயகாந்த், அஜித், விக்ரம், கமல், தனுஷ் என்று பிரபல நடிகர்களை வைத்து படங்களைத் தயாரித்திருந்தாலும், இந்நிறுவனம்  ஐ, மரியான், விஸ்வரூபம் -2 போன்ற படங்கள் படுதோல்வியடைந்ததால், கடனில் இருந்து நீண்ட நாட்களாகவே மீண்டு எழ முடியாமல் இருந்து வந்தது. இந்நிலையில், கடன் தொகையைத் தாங்க முடியாமல், அந்நிறுவனம் இந்த முடிவை எடுத்திருப்பதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆஸ்கர் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவிச்சந்திரன் ஆரம்ப காலத்தில் ஜாக்கிசான் படங்களை தமிழகம் முழுவதும் வினியோகம் செய்து வந்தார். பல தமிழ் திரைப்படங்களின் செங்கல்பட்டு விநியோக உரிமையையும் செய்து வந்த ரவிச்சந்திரன், இந்த தொழிலில் முன்னணியில் இருந்து வந்தார். 2000 ஆம் ஆண்டு தமிழ் திரை உலகில் கால் பதித்திருக்கிறார் இந்த நிறுவனத்தில் இவரது சகோதரரான ரமேஷ் பாபுவும் ஒரு பங்குதாரராக இருந்து 10 கோடி ரூபாய் முதலீட்டில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது 2000 ஆம் ஆண்டு தயாரிப்பாளர்களாக கால்பதித்த ஆஸ்கர் பிலிம்ஸ், அதன் பிறகு வீறுநடை போட்டு இந்த தொழிலில் தனி ராஜாங்கமே நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அடுத்தடுத்து நேர்ந்த தொடர் தோல்விகளால், பலமுறை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கியிருந்த கடன் தொகையை செலுத்த முடியாமல், சொத்துக்களை வங்கி ஜப்தி செய்யும் அளவிற்கு சென்றது. இப்படி பல்வேறு வங்கிகளில் ஆஸ்கார் பிலிம்ஸ், தனது சொத்துக்களை அடமானம் வைத்து வாங்கிய தொகை 121 கோடியே 36 லட்சம் ரூபாய் என்று தெரிகிறது.