1,200 ஆசிரியர்கள் கேரளா சுற்றுப் பயணம்.?! பள்ளிக் கல்வித் துறை முடிவு..!

 

1,200 ஆசிரியர்கள் கேரளா சுற்றுப் பயணம்.?! பள்ளிக் கல்வித் துறை முடிவு..!

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் என மாணவர்களை ஊக்கப் படுத்தவும், மாணவர்களின் அறிவு மற்றும் செயல் திறனைப் பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்காக ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள், மாணவர்களுக்கு மடிக்கணினி திட்டம் என மாணவர்களை ஊக்கப் படுத்தவும், மாணவர்களின் அறிவு மற்றும் செயல் திறனைப் பள்ளிக் கல்வித்துறை புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்கள் மட்டும் கற்றால் போதுமா.? மாணவர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கும் பயிற்சிகளை அளிக்க வேண்டும் எனப் பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. 

Government teacher

அதனைச் செயல்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு கணிதம் மற்றும் அறிவியல் படம் நடத்தும், 6 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4 முதுகலை ஆசிரியர்கள் என ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 10 ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மொத்தமாகத் தமிழகத்தில் 1,200 ஆசிரியர்கள் கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்திற்குக் கல்விச் சுற்றுலா பயணத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் எனப் பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது. 

Government staff

இது குறித்துப் பேசிய பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள், அரசுப் பள்ளி ஆசிரியர்களைச் சுற்றுலாப் பயணம் அழைத்துச் செல்ல, அரசு ஒரு ஆசிரியருக்கு 2000 ரூபாய் வீதம் ரூ.24 லட்சம் ஒதுக்கியுள்ளது. அதன் மூலம் ஆசிரியர்களை 4 நாட்கள் கேரளாவிலுள்ள  தேசிய விண்வெளி ஆய்வு மையம், கணித தொழில்நுட்ப நிறுவனங் கள் மற்றும் அருட்காட்சியத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்கு விண்வெளி மற்றும் கணிதவியல் தொடர்பான அனைத்து விவரங்களையும் வல்லுநர் குழுவால் கற்பிக்கப் படும். இதன் மூலம் ஆசிரியர்களின் திறன் மேம்படுத்தப் படுவதோடு மாணவர்களின் திறனும் மேம்படும். மேலும், இந்த சுற்றுலா மத்திய ரயில்வேத் துறையின் உதவியோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகின்றன.