120 மணி நேரத்தில் ரூ.32 லட்சம் கோடியை இழந்த உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள்… அம்பானி மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி…..

 

120 மணி நேரத்தில் ரூ.32 லட்சம் கோடியை இழந்த உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள்… அம்பானி மட்டும் ரூ.36 ஆயிரம் கோடி…..

கடந்த வாரம் உலக பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட பலத்த சரிவு காரணமாக உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள் ரூ.32 லட்சம் கோடியை இழந்துள்ளனர். இதில் நம்ம முகேஷ் அம்பானி பங்கு மட்டும் ரூ.36 ஆயிரம் கோடியாம்.

சீனாவை பதம் பார்த்து வரும் கொரோனா வைரஸ் மற்ற உலக நாடுகளுக்கும் பரவ தொடங்கியுள்ளது. இதனால் உலக நாடுகள் கடும் அச்சத்தில் உள்ளன. ஏற்கனவே உலக பொருளாதாரத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனாவைரஸ் தற்போது உலக மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக மாறிவிட்டதால் சர்வதேச பங்குச் சந்தைகளில் வர்த்தகம் பலத்த அடி வாங்கியது. குறிப்பாக அமெரிக்க பங்குச் சந்தைகளின் டவ் ஜோன்ஸ் தொழிற்துறை இன்டெக்ஸ் கடந்த வாரம் 12 சதவீதத்துக்கு மேல் சரிந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 2,800 புள்ளிகளுக்கு மேல் வீழ்ந்தது.

ஜெப் பிசோஸ்

உலக பங்குச் சந்தைகளின் சரிவால் உலகின் டாப் 500 கோடீஸ்வரர்கள் மட்டும் சுமார் ரூ.32 லட்சம் கோடியை இழந்தனர். இந்த கோடீஸ்வரர்கள் வைத்துள்ள நிறுவனங்களின் பங்குகளின் விலை குறைந்ததே இதற்கு காரணம். நம் நாட்டில் மட்டும் கடந்த திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரையிலான 120 மணி நேரத்தில் மட்டும் பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.11 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதில் முகேஷ் அம்பானி உள்ளிட்ட சில பிரபலங்கள் இழந்த தொகை பாருங்க…

ஷிவ் நாடார்

பிரபலங்கள்                 இழந்த தொகை
முகேஷ் அம்பானி     ரூ.35,000 கோடி
ஷிவ் நாடார்                ரூ.11,520 கோடி
அசிம் பிரேம்ஜி            ரூ.10,080 கோடி
நாரயண மூர்த்தி        ரூ.720 கோடி
நந்தன் நீல்கேனி        ரூ.640 கோடி

பில் கேட்ஸ்

உலகின் டாப் 3 கோடீஸ்வரர்களான அமேசான் நிறுவனத்தின் ஜெப் பிசோஸ், மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் துணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் எல்.வி.எம்.எச். தலைவர் பெர்னார்ட் அர்னால்ட் ஆகியோர் கடந்த வாரம் பங்குச் சந்தையால் தங்களது சொத்து மதிப்பில் ஒட்டு மொத்த அளவில் ரூ.2.16 லட்சம் கோடியை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.