கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

 

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

திருவனந்தபுரத்தில் நிபா வைரஸ் தாக்குதலால் 12 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 30 ஆயிரம் பாதிப்புகள் பதிவாகிறது. நேற்று ஒரே நாளில் அங்கு 29,682 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சுமார் 2.50 லட்சம் பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவ்வாறு கொரோனா வைரஸ் கேரளாவையே உலுக்கி எடுத்து வரும் நிலையில் அங்கு நிபா வைரஸ் மீண்டும் பரவுவது மக்களை பீதி அடைய செய்துள்ளது.

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

கோழிக்கோடு மாவட்டத்தை சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு நிபா வைரஸ் அறிகுறி தென்பட்டதால் அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தீவிர அறிகுறிகளுடன் சிகிச்சை பெற்று வந்த சிறுவனை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வந்த நிலையில், இன்று காலை சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் ஆலப்புழாவில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. சிறுவன் நிபா வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாக முடிவுகள் வந்துள்ளது. அடுத்த சில மணி நேரத்திலேயே சிறுவன் உயிரிழந்தது மருத்துவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

கேரளாவை மிரட்டும் ‘நிபா வைரஸ்’… 12 வயது சிறுவன் பரிதாப மரணம்!

நிபா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் திறன் கொண்டதால் சிறுவனின் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த வைரஸ் விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு பரவும் என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2018ம் ஆண்டு இந்த வைரஸ் கேரளாவில் பரவிய போது 17 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளார். இந்த வைரஸ் பாதிப்புக்கு சிகிச்சை முறை இன்னும் வரையறுக்கப்படவில்லை. அதே போல அதற்கான தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.