3 தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல உதவி – சேமிப்பு பணம் ரூ.48 ஆயிரம் செலவழித்த 12 வயது சிறுமி

 

3 தொழிலாளர்கள் ஊருக்கு செல்ல உதவி – சேமிப்பு பணம் ரூ.48 ஆயிரம் செலவழித்த 12 வயது சிறுமி

நொய்டா: மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு 12 வயது சிறுமி தனது சேமிப்பு பணத்தை கொடுத்து உதவியுள்ளார்.

நாடு முழுவதும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் மிக மோசமான நெருக்கடியை எதிர்கொண்டு வருகின்றனர். ஊரடங்கு காரணமாக உணவு மற்றும் தங்குமிடம் கூட இல்லாமல் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நகரங்களில் சிக்கித் தவிக்கின்றனர். ஊரடங்கு காரணமாக வருமானம் இன்றி அவர்கள் வறுமையின் உச்சத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆனால் பொதுமக்களில் பலர் அத்தகைய தொழிலாளர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், நொய்டாவைச் சேர்ந்த நிஹாரிகா திவேதி என்ற 12 வயது சிறுமி ஒருத்தி தனது சேமிப்பு பணம் ரூ.48 ஆயிரத்தை பயன்படுத்தி மூன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலமான ஜார்க்கண்டில் உள்ள தங்கள் வீட்டிற்கு செல்ல உதவி செய்துள்ளார். மூன்று தொழிலாளர்களும் விமானம் மூலம் ஜார்கண்ட் செல்வதற்கு தேவையான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொடுத்தார். இதுகுறித்து அந்த சிறுமி கூறுகையில் “இந்த சமூகம் எங்களுக்கு நிறைய கொடுத்துள்ளது. இந்த நெருக்கடி காலகட்டத்தில் அதைத் திருப்பிச் செலுத்துவது எங்கள் பொறுப்பு” என்றார்.