கோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி!

 

கோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி!

தமிழக-கேரள எல்லைப்பகுதியான கோவை ஆனைக்கட்டிக்கு முன்பு உள்ள ஜம்புகண்டி அருகே வனத்தை ஒட்டிய விவசாய நிலத்தில் 12வயது மதிக்கத்தக்க ஆண் யானை வாயில் காயத்துடன் இருந்தது. இதனை அறிந்த வனத்துறையினர் மற்றும் மருத்துவர் சுகுமார் பழங்களில் மருந்து வைத்து யானைக்கு சிகிச்சை அளித்துவந்தனர்.

கோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி!

இதையடுத்து நேற்றிரவு வனப்பகுதிக்குள் சென்ற யானை வனத்தை ஒட்டிய அகழி அருகே யானை படுத்துவிட்டதால், அதற்கு 25 பாட்டில்கள் குளுகோஸ், இரும்பு சத்திற்கான மருந்து ஆகியவை வழங்கப்பட்டது. இருப்பினும், யானை உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை.

கோவையில் வாயில் காயமடைந்த யானை பரிதாப பலி!

இந்நிலையில் காயம் காரணமாக சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஆண் யானை இன்று காலை உயிரிழந்தது. உணவு உட்கொள்ளும் போது வாயில் மரக்குச்சிகள் குத்தியதால் ஏற்பட்ட காயம் காரணமாக கடந்த 10 நாட்களாக யானை உணவு ஏதும் சாப்பிடாமல் இருந்துள்ளது. இதனால் அது உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து யானையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு இறந்த இடத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது.