நைட் அதிகம் சாப்பிட்டால் கூட தப்பு… கல்லீரலை பாதிக்கும் 8 விஷயங்கள்!

 

நைட் அதிகம் சாப்பிட்டால் கூட தப்பு… கல்லீரலை பாதிக்கும் 8 விஷயங்கள்!

நம்முடைய உடலின் ரசாயன தொழிற்சாலை கல்லீரல். 1000த்துக்கும் மேற்பட்ட பணிகளை கல்லீரல் செய்கிறது. நாம் சாப்பிடும் புரதச் சத்தை உடலுக்குத் தேவையான படி மாற்றிக் கொடுப்பது, கொழுப்பை உருவாக்குவது, நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்வது என்று கல்லீரல் செய்யும் பணிகளை பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். நம்முடைய சில தவறுகள் கல்லீரலை பாதிப்படைய செய்கின்றன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்!

நைட் அதிகம் சாப்பிட்டால் கூட தப்பு… கல்லீரலை பாதிக்கும் 8 விஷயங்கள்!

நம்முடைய உடல் தண்ணீரால் ஆனது. 75 சதவிகிதத்துக்கும் மேல் தண்ணீர்தான் உள்ளது. போதுமான அளவு தண்ணீர் அருந்தாதது நச்சுக்களை உடலில் தங்கச் செய்துவிடுகிறது. இது கல்லீரலை பாதிப்படைய செய்கிறது. போதுமான அளவில் தண்ணீர் அருந்தும்போது நச்சுக்கள் வெளியேற்றப்படும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

மது அருந்துவது கல்லீரலை நேரடியாக பாதிப்படைய செய்கிறது. ஆல்கஹால் உள்ளே சென்றால் கல்லீரல் செயல்பாடு குறைந்துவிடும். தொடர்ந்து மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம் அதைத் தொடர்ந்து கல்லீரல் செயலிழப்பு வரை பிரச்னை ஏற்படலாம்.

சிகரெட் புகைப்பது நுரையீரலை மட்டுமல்ல கல்லீரலையும் பாதிக்கிறது. புகைப்பதனால் ரத்தத்தில் நச்சுக்கள் அளவு அதிகரிக்கிறது. அதைப் பிரித்து நீர்த்துப் போகச் செய்யும் வேலை கல்லீரலையே சென்று சேருகிறது. தொடர்ந்து புகைப்பதன் காரணமாக நச்சுக்கள் அளவு அதிகரித்து கல்லீரல் செயலிழப்பு, புற்றுநோய் வரை பாதிப்பு ஏற்படலாம்.

ஒவ்வொருவரும் அவரவர் உயரத்துக்கு ஏற்ப உடல் எடையைப் பராமரிக்க வேண்டும். அதிகப்படியான உடல் பருமன் கூட கல்லீரலை பாதிப்படைய செய்கிறது.

தற்போது அதிக அளவில் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட அதிக சர்க்கரை உள்ள உணவுகளை சாப்பிடுவதுதான் காரணமாக உள்ளது. அதிக சர்க்கரை, குளுக்கோஸ் கல்லீரலில் கொழுப்பு படிவதை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் கல்லீரல் செயலிழப்புக்கான வாய்ப்பு அதிகரிக்கிறது.

இரவு நேரத்தில் அதிக அளவில் சாப்பிடுவதும் கூட கல்லீரலை பாதிக்கிறது. இரவு நேரத்தில் அதிக அளவில் சாப்பிடுவது கல்லீரலுக்கு அதிக வேலைப்பளுவை ஏற்படுத்தி கல்லீரல் செல்கள் இழப்பு ஏற்பட காரணமாகிவிடுகிறது. இரவு நேரத்தில் அளவோடு சாப்பிட வேண்டும். இரவு நேரத்தில் கேரட், பீட்ரூட் போன்றவற்றைச் சாப்பிடுவது கல்லீரல் தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள உதவும்.

பாதுகாப்பற்ற பாலுறவு கல்லீரலை பாதிக்கும். ஹெபடைட்டிஸ் சி வகை வைரஸ் பாலியல் உறவு மூலமாக பரவுகிறது. கல்லீரல் செயலிழப்புக்கு இந்த ஹெபடைட்டிஸ் தொற்றும் முக்கிய காரணமாக இருக்கிறது.

மருத்துவர் பரிந்துரையின்றி சுய மருத்துவம் மேற்கொள்வது கல்லீரலையே பாதிப்படைய செய்கிறது. நாம் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் கல்லீரலில் தான் உடைக்கப்பட்டு உடலுக்குத் தேவையான வகையில் மாற்றப்படுகிறது. அளவுக்கு அதிகமான வீரியம் கொண்ட மாத்திரைகளை சாப்பிடும்போது அது கல்லீரல் செயல்பாட்டை சிதைக்கும்.