12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

 

12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

மலைப்பாங்கான இடங்களில் 12 புதிய தொடக்கப்பள்ளிகள் அமைக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. அவையின் தொடக்கத்தில் தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை முதல்வர் மு.க ஸ்டாலின் தாக்கல் செய்தார். உயர் படிப்புகளில் குறைந்த அளவிலான மாணவர்கள் சேருவதை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுடன் அரசு பள்ளி மாணவர்கள் போட்டியிடும் சூழல் இருப்பதால் உள் ஒதுக்கீடு வழங்கப்படுவதாகவும் முதல்வர் அறிவித்தார்.

12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும் – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியான அதிமுக தனது முழு ஆதரவை வழங்கியது. பெரும்பாலும் ஏழை, எளிய, நடுத்தர குடும்ப மாணவர்கள் அரசு பள்ளியில் படிக்கிறார்கள். அரசு பள்ளி மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக கல்வி கற்க முடியாத சூழல் உள்ளது. எனவே 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு ஒருமனதாக ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து, அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பள்ளிக்கல்வித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பை அவையில் வாசிக்கத் தொடங்கினார்.

அப்போது, 2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும். அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஏசி மற்றும் இதர மின் வசதிகள், புதிய தொழில்நுட்பங்கள் என நவீன முறையில் மேம்படுத்தப்படும் என்று தெரிவித்தார். மேலும், 2021 – 22ம் கல்வியாண்டில் பள்ளிகள் திறக்கப்படும் மலைப்பாங்கான மற்றும் தொலைதூர பகுதியில் 12 புதிய தொடக்கப் பள்ளிகள் அமைக்கப்படும். 22 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.