பூதாகரமான பெகாசஸ்… நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

 

பூதாகரமான பெகாசஸ்… நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

பெகாசஸ் என்ற மென்பொருள் இன்று இந்தியாவையே புரட்டி போட்டிருக்கிறது. இந்தியர்களின் தரவுப் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. மத்திய அரசின் கயமைத்தனம் வெட்டவெளிச்சமாகி இருப்பதாக எதிர்க்கட்சிகள் கொந்தளித்து வருகின்றன. இஸ்ரேலைச் சேர்ந்த பெகாசஸ் எனும் ஸ்பைவேர் மூலம் இந்தியாவைச் சேர்ந்த பிரபலங்களின் போன்களை ஹேக் செய்து, அவர்களின் போன் கால்களை ஒட்டு கேட்கும் வேலை படுஜோராக அரங்கேறியிருக்கிறது. இந்த பெகாசஸ் எந்த போனிலும் ஊடுருவி அனைத்தையும் பக்காவாக ஆட்டையைப் போடும் ஆற்றல் படைத்தது.

பூதாகரமான பெகாசஸ்… நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

இதனை உருவாக்கியது இஸ்ரேல் நாட்டின் என்எஸ்ஓ நிறுவனம். இந்நிறுவனத்தில் பல்வேறு உலக நாடுகளின் அரசுகள் வாடிக்கையாளர்களாக உள்ளன. அதாவது இந்த ஸ்பைவேரை பெற்றுக்கொண்டு அரசின் மீது அதிருப்தியில் இருப்பவர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள் என பலரையும் வேவு பார்க்க பயன்படுத்தலாம். இதன்மூலம் இந்தியாவில் 300க்கும் மேற்பட்டோரின் போன்கள் ஹேக் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் இரண்டு போன்கள் ஹேக் செய்யப்பட்டிருப்பது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பூதாகரமான பெகாசஸ்… நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

மத்திய அரசின் தயவு இல்லாமல் இந்த ஹேக்கிங் அரங்கேறியிருக்காது என்பதால், ஜூலை 19ஆம் தேதி கூடிய நாடாளுமன்ற மழைக்காலக கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்பிக்கள் இதுதொடர்பாக கேள்வியெழுப்பினர். கடந்த 10 நாட்களாக இதுதொடர்பாக நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென எதிர்க்கட்சி எம்பிக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் மத்திய அரசோ எதற்கும் செவி சாய்க்காமல் மௌனம் காக்கிறது. இச்சூழலில் இன்று சட்டத்திருத்த மசோதாக்கள் நிறைவேற்றப்படவிருந்தன.

பூதாகரமான பெகாசஸ்… நாடாளுமன்றத்தை முடக்கிய ஜோதிமணி உட்பட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட்!

ஆனால் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நிறைவேற்ற விடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி, டீன் குரியகோஸ், ஹிபி ஈடன், ரவ்நீத் பிட்டு, குர்ஜீத் ஔஜிலா, டி.என்.ப்ரதாபன், வைத்திலிங்கம், சப்தகிரி சங்கர், ஏ.எம்.ஆரிஃப், தீபக் பைஜ் உள்ளிட்ட 12 எம்பிக்கள் இடைநீக்கம் செய்து சபாநாயகர ஓம்பிர்லா உத்தரவிட்டார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துமுடியும் வரை இவர்களால் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.