12 நாள் முழு ஊரடங்கு… அரிசி ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரண நிதி! – தமிழக அரசு அறிவிப்பு

12 நாள் முழு ஊரடங்கு… அரிசி ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரண நிதி! – தமிழக அரசு அறிவிப்பு

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு மாவட்டங்களில் அரிசி, ரேஷன் கார்டு வைத்திருந்தால் அவர்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

12 நாள் முழு ஊரடங்கு… அரிசி ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரண நிதி! – தமிழக அரசு அறிவிப்பு
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வருகிற 19ம் தேதி முதல் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சில வழிகாட்டுதல்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, வங்கிகள் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். தானியங்கி பணம் வழங்கும் இயந்திரங்கள், அது தொடர்பான வங்கிப் பணி வழக்கம் போல செயல்படும்.

12 நாள் முழு ஊரடங்கு… அரிசி ரேஷன் கார்டுக்கு ரூ.1000 நிவாரண நிதி! – தமிழக அரசு அறிவிப்பு
ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 2 மணி வரை மட்டுமே செயல்படும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகள் இயங்காது. சென்னை மாநகராட்சிப் பகுதிகளிலும், திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் பகுதிகளில் உள்ள அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 நிவாரணமாக வழங்கப்படும். இதேபோன்று மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து அமைப்புசாரா தொழிலாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கும் மற்றும் பல்வேறு துறைகளிலுள்ள பிற நலவாரிய உறுப்பினர்களுக்கும் 1000 ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்” என்று கூறியுள்ளார்.