சென்னையில் 12 ஆக குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

 

சென்னையில் 12 ஆக குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

சென்னையில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் 12 ஆக குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவத்தொடங்கியதும் பாதிக்கப்பட்ட முதல் பகுதி சென்னை தான். அங்கு மக்கள் தொகை அதிகமாக இருப்பதால் பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்தது. இவ்வாறு கொரோனா பரவுவதற்கு கோயம்பேடு மார்க்கெட்டும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. முழு பொதுமுடக்கம் அமலாக உள்ளது என தெரிந்தவுடன், காய்கறிகளை வாங்கி வைத்துக் கொள்ள மக்கள் சந்தையில் குவிந்தனர். கோயம்பேடு சந்தையில் இருந்த வியாபாரிகளின் மூலமாக மக்களுக்கு கொரோனா பரவி, சென்னையில் கொரோனா பெருந்தொற்றாக உருவெடுத்தது.

சென்னையில் 12 ஆக குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

இதனையடுத்து கொரோனாவில் இருந்து சென்னையை மீட்க சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கையை முடுக்கிவிட்டது. வீடு தோறும் கொரோனா பரிசோதனை, நடமாடும் மருத்துவ முகாம் உள்ளிட்ட அதிரடி நடவடிக்கையின் விளைவாக சென்னையில் பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் அனைவரும் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

சென்னையில் 12 ஆக குறைந்தது கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள்!

இந்த நிலையில் சென்னையின் கட்டுப்பாட்டு பகுதிகள் 12 ஆக குறைந்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக மாதவரத்தில் 7 தெருக்களும், அண்ணா நகரில் 3 தெருக்களும் வளசரவாக்கம் மற்றும் சோழிங்கநல்லூரில் தலா ஒரு கட்டுப்பாட்டு பகுதியும் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆரம்ப கட்டத்தில் சென்னையில் 300க்கும் மேற்பட்ட கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.