பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்!

 

பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்!

மகாராஷ்டிரா சட்டப்பேரவையில் தொடர் அமளியில் ஈடுபட்டு வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர சட்டப்பேரவை இன்று காலை தொடங்கியது. அவை தொடங்குவதற்கு முன்பாகவே பாஜக உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னாள் உள்துறை அமைச்சர் மீதான ஊழல் புகார், பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து சட்டப்பேரவைக்கு முன்பு அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர்.

பாஜக எம்.எல்.ஏக்கள் 12 பேர் ஓராண்டுக்கு சஸ்பெண்ட்!

பின்னர், சபாநாயகர் இல்லாத நிலையில் தற்காலிக சபாநாயகர் ஜாதவ் தலைமையில் சட்டமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. அவை தொடங்கிய பிறகும் பாஜக எம்எல்ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். அதுமட்டுமில்லாமல், தற்காலிக சபாநாயகர் பாஸ்கர் ஜாதவை தரக்குறைவாக பேசினர். இதையடுத்து, பாஜக எம்எல்ஏக்கள் 12 பேரை ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்து தற்காலிக சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவரும் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான தேவேந்திர பாட்னாவிஸ் தலைமையில் பாஜக எம்எல்ஏக்கள் சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.