12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்: சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்:  சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

பள்ளியில் தொடங்கிய நட்பை 35க்கு மேலும் தொடர்ந்து வந்த தோழிகளுக்கு இந்த ஆண்டு பெரும் சோகத்தை தந்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒரு இடத்தில் கூடி மகிழும் இவர்கள் இந்த ஆண்டும் கூடிகொண்டாட கோவாவுக்கு போனபோது விபத்தில் சிக்கினர். இந்த கோர விபத்தில் 17 தோழிகளில் 12 பேர் உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்:  சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

சிகிச்சையில் இருப்போர் விரைவில் குணமடைந்து வர வேண்டுமென்று பிரதமர் மோடியும் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்.

கர்நாடகாவில் தவனகரே செயிண்ட் பவுல்ஸ் பள்ளியில் படித்த தோழிகள்17 பேர் வெவ்வேறு ஊர்களில் வேலை பார்த்து வருகிறார்கள். 35 வயதுக்குமேல் ஆனாலும், இப்போதும் இவர்கள் ஆண்டுதோறும் ஒரு முறை ஒன்றாக கூடி கொண்டாடி மகிழ்வது வழக்கம். இந்த வருட கொண்டாட்டம்தான் சோகத்தில் முடிந்திருக்கிறது.

12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்:  சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

இந்த வருடம் கோவாவுக்கு செல்ல முடிவெடுத்த தோழிகள் ஒரு டெம்போ டிராவலரில் பயணித்தனர். நேற்று அதிகாலை புறப்படுவதற்கு முன்பாக 17 பேரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.

12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்:  சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

காலை 7 மணிக்கு ஹூப்ளி நகரை தாண்டிச்சென்றனர். தார்வாட் நகரில் இருந்து 8 கிலோ மீட்டருக்கு முன்னதாக இட்டிகட்டி பகுதியில் போய்க்கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரி நிலை தடுமாறி இந்த பக்கம் வந்து தோழிகள் சென்ற டிராவலர் வேன் மீது மோதியது. இந்த சம்பவத்தில் வேன் உருக்குலைந்து போனது.

இந்த கோர சம்பவத்தில் 12 தோழிகள் உயிரிழந்தனர். 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

12 தோழிகள் பலியான பரிதாபம் – 5 தோழிகள் உயிருக்கு போராட்டம்:  சோகத்தில் முடிந்த இந்த வருட சந்திப்பு

டிராவல் வேன் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துவிட்டார்.

இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரங்கல் தெரிவித்திருக்கிறார். பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் குணமாக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்திருக்கிறார்.