தலா12 கேட்டா மொத்தமே 12தான் என்பதா? என்ன செய்யப்போகிறார்கள் தோழர்கள்?

 

தலா12 கேட்டா மொத்தமே 12தான் என்பதா? என்ன செய்யப்போகிறார்கள் தோழர்கள்?

திமுகவில் கூட்டணிக் கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. முஸ்லிம் லீக் கட்சிக்கு 3 இடங்கள் ஒதுக்கப்பட்டதில் அவர்கள் ஓரளவு மன நிறைவுடன் உள்ளனர் என்றே தெரிகிறது. ஆனால், மனிதநேய மக்கள் கட்சி இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டதில் அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதனால், அந்த இரண்டு சீட்டையும் திமுகவிடமே திருப்பி கொடுத்துவிடும் முடிவில் உள்ளதாக தகவல்.

தலா12 கேட்டா மொத்தமே 12தான் என்பதா? என்ன செய்யப்போகிறார்கள் தோழர்கள்?

தவிர மதிமுகவுடனும் இன்னும் தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு எட்டவில்லை. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டாமல் இழுபறி நீடித்து வருகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகளும் கேட்ட சீட்டு வராததால் அதிருப்தியில் உள்ளனர். தலா 12 சீட்டுகள் தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். ஆனால் திமுகவோ தலா 6 வீதம் மொத்தமே 12 சீட்டுகள் தான் ஒதுக்க முடியும் என்று கூறியிருக்கிறது.

இதனால் அதிருப்தியில் இருக்கிறார்கள் தோழர்கள்.

தலா12 கேட்டா மொத்தமே 12தான் என்பதா? என்ன செய்யப்போகிறார்கள் தோழர்கள்?

இந்நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு கூட்டம் காலையில் கூடுகிறது. தொகுதி பங்கீடு, கூட்டணி விவகாரங்கள் குறித்து இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. தங்களுக்கு கொடுக்கப்படும் குறைந்த தொகுதிகளை இப்போது திமுகவுக்கு பணிந்து வாங்கிகொண்டால் எதிர்வரும் காலங்களில் தொகுதி எண்ணிக்கையை உயர்த்துவது என்பது பெரும் பாடாக போய்விடும் என்று தோழர்கள் யோசிக்கின்றனர். அதனால் இன்று அல்லது நாளைக்குள் தொகுதிப் பங்கீடு மற்றும் கூட்டணி முடிவு பற்றி ஒரு முடிவுக்கு வர இருக்கின்றனர் தோழர்கள்.