12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு! – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

தமிழகத்தில் தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வெப்பச்சலனம் காரணமாக அரியலூர், கடலூர், விழுப்புரம், தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. 

rain-78

திருச்சி, கரூர், சேலம், தருமபுரியில் வெப்பம் அதிகமாக காணப்படும். 40 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகலாம். சென்னையில் வானம் லேசாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
அந்தமான் அருகே வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் அது காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுவடையும். எனவே மீனவர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்” என்று கூறியுள்ளது.