12 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் – இந்தியாவில் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

 

12 ஜிபி ரேம், ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் – இந்தியாவில் ஐகூ 3 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ஐகூ பிராண்டின் ஐகூ 3 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: ஐகூ பிராண்டின் ஐகூ 3 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஐகூ பிராண்டின் ஐகூ 3 மற்றும் ஐகூ 3 5ஜி ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இவ்விரு ஸ்மார்ட்போன்களிலும் 6.44 இன்ச் ஃபுல் ஹெச்.டி பிளஸ் டிஸ்பிளே, 48 எம்.பி பிரைமரி கேமரா, 16 எம்.பி பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஐகூ யு.ஐ. 1.0 வழங்கப்பட்டுள்ளது.

ttn

இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் வொல்கானோ ஆரஞ்ச், குவாண்டம் சில்வர், டொர்னாடோ பிளாக் ஆகிய மூன்று நிறங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐகூ 3 4ஜி ஸ்மார்ட்போனின் 128 ஜிபி மெமரி மாடல் மற்றும் 256 ஜிபி மெமரி மாடல்களின் விலைகள் முறையே ரூ.36,990 மற்றும் ரூ.39,990 ஆகும். அதேபோல ஐகூ 3 5ஜி ஸ்மார்ட்போனின் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்ட மாடல் விலை ரூ.44,990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விற்பனை வருகிற மார்ச் 4-ஆம் தேதி முதல் ஃப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும்.