12 கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்பு – ஆய்வில் பகீர் தகவல்!

12 கோடி மக்கள் உயிரிழக்க வாய்ப்பு – ஆய்வில் பகீர் தகவல்!

இந்தியா-பாகிஸ்தானிடையே போர் வந்தால் சுமார் 12.5 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

இந்தியா-பாகிஸ்தானிடையே போர் வந்தால் சுமார் 12.5 கோடி மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளனர். 

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ‌ரத்து செய்தது, இந்தியா பாகிஸ்தான் உறவில் மேலும் விரிசலை அதிகரித்துள்ளது. அதைத்தொடர்ந்து, இந்தியாவுடன் போர் நிகழ்வதற்கான வாய்ப்பு இருப்பதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கூறி வருகிறார்.

war

இந்நிலையில் எதிர்காலத்தில் இந்தியா-பாகிஸ்தானிடையே போர் வந்தால் அதன் விளைவுகள் என்னென்ன என்பது குறித்து அமெரிக்க பல்கலைகழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் அந்த போர் அணு ஆயுத போராக இருக்கக் கூடும் என்றும், மனித சமூகத்தில் இதுவரை முன்னுதாரணமும் இல்லாத போராக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் அதன் விளைவாக 5 முதல் 12.5 கோடி மக்கள் வரை உயிரிழக்கும் அபாயம் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.