12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறிய நல்லகண்ணு : எடப்பாடி அரசின் லட்சணம் இவ்வளவுதான்..!

 

12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டிலிருந்து வெளியேறிய நல்லகண்ணு : எடப்பாடி அரசின் லட்சணம் இவ்வளவுதான்..!

இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டிலிருந்து வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார். 

சென்னை:  இந்திய கம்யூ. கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு  12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டிலிருந்து வேறு இடத்திற்குக் குடிபெயர்ந்துள்ளார். 

தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான நல்லக்கண்ணு தான். இலவசத்தை புறக்கணிக்க நினைக்கும் நல்லகண்ணு 
சென்னை தியாகராய நகரிலுள்ள அரசு குடியிருப்பு வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார். 

nallakanu

இந்நிலையில் தியாகராய நகரிலுள்ள உள்ள வீட்டிலிருந்து இடம்பெயர்ந்து கே.கே. நகர் சென்றுள்ளார் நல்லகண்ணு. ஏன்  இந்த திடீர் மாற்றம் என்று விசாரித்தால், நல்லகண்ணு வசித்து  வந்த வீடு தமிழக அரசு சார்பில் அவருக்கு இலவசமாக கொடுக்கப்பட்டதாம். இருப்பினும் அதை ஏற்றுக்கொள்ளாத நல்லகண்ணு அனைவரைப் போலவும் வாடகை கொடுத்தே அங்கு வசித்து வந்துள்ளார். 

nallakannu

இதைத் தொடர்ந்து குடியிருப்பு உள்ள இடத்தில் புதிய கட்டடம் வருவதால் அங்கு வசிப்பவர்களை வேறு இடத்துக்கு இடம்மாறக்கோரி மாநகராட்சி தரப்பிலிருந்து நோட்டீஸ் தரப்பட்டது. இதனால் அரசின் உத்தரவை ஏற்று 12 ஆண்டுகள் வாழ்ந்த வீட்டை காலி செய்து கே.கே. நகருக்கு இடம் பெயர்த்துள்ளார் நல்லகண்ணு. அவர் ஒரே ஒரு கோரிக்கை விடுத்திருந்தாலும் அரசு அவருக்கு வேறு மாற்று வீடு  தந்திருக்கும். ஆனாலும்  சட்டம் அனைவர்க்கும் சமம் என்பதை  மனதில் நிறுத்தி சத்தமில்லாமல் தன் உடமைகளுடன் சென்றுள்ளார் இந்த மூத்த அரசியல்வாதி. இருப்பினும் நல்லகண்ணு வீட்டை விட்டுவெளியேறிய விவகாரம் அரசு அதிகாரிகளுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. இருந்தும் அதை கண்டுகொள்ளாமல் இருந்திருப்பது எடப்பாடி அரசின் லட்சணத்தையே காட்டுகிறது என்று அரசியல்தலைவர்கள் பலர் கருத்துக்கூறி வருகின்றனர். 

nallakannu

இதையடுத்து நல்லகண்ணுவுக்கு வேறு இடத்தில் தமிழக அரசு வீடு வழங்க வேண்டும் எனத் தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சென்னை தியாகராயநகர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திற்குச் சொந்தமான குடியிருப்பில் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வந்த தமிழகத்தின் முதுபெரும் தலைவர் நல்லக்கண்ணு அவர்களை உடனடியாக காலி செய்யும்படி ஆணையிடப்பட்டு அவரும் வேறு இடத்திற்குக் குடி பெயர்ந்திருக்கிறார். 94 வயதான முதிர்ந்த தலைவரை அவருடைய தியாகம் தொண்டு ஆகியவற்றை எண்ணிப் பார்க்காமல் அவரை வெளியேற்றி இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தமிழக முதலமைச்சர் இந்தப் பிரச்சனையில் தலையிட்டு அவருக்கு அரசு வீடு ஒன்றினை உடனடியாக வழங்க முன் வருமாறு வேண்டிக் கொள்கிறேன்’ என்று கேட்டுக்கொண்டுள்ளார்.