12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழை தொலைத்த பள்ளி, கல்லூரியில் சேர்க்கை தாமதம்!

 

12ஆம் வகுப்பு மாணவர்களின் சான்றிதழை தொலைத்த பள்ளி, கல்லூரியில் சேர்க்கை தாமதம்!

கல்லூரியில் சேர்க்க காலதாமதம் ஆகிவருவதால், பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் நெருக்கவும்தான் தெரியவருகிறது, மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்து போன விவகாரம். கல்லூரிகள் துவங்கி வகுப்புகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில், விரைவில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சுமதி கூறியுள்ளார்.

திருவண்ணாமலை, ஜவ்வாது மலையில் பழங்குடி மக்களுக்கான உண்டு உறைவிட பள்ளியான, நம்மியம்பட்டு ஊராட்சி ஒன்றிய மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வருடம் இப்பள்ளியில் பயின்ற 21 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றிருந்தனர். தேர்ச்சி பெற்றதில் 10 மாணவர்களுக்கு மட்டுமே இதுவரை மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 

School in Jawadhu Hills

மீதமுள்ள 11  பேரின் சான்றிதழ்கள் இதுவரை மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. கல்லூரியில் சேர்க்க காலதாமதம் ஆகிவருவதால், பள்ளி நிர்வாகத்தை பெற்றோர் நெருக்கவும்தான் தெரியவருகிறது, மாணவர்களின் சான்றிதழ்கள் தொலைந்து போன விவகாரம். கல்லூரிகள் துவங்கி வகுப்புகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில், விரைவில் புதிய சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியர் சுமதி கூறியுள்ளார்.