’’இரவு 11க்கு உதயநிதி குடும்பம் மின்சாரம் இல்லாமல் தூங்குமா? ’’

 

’’இரவு 11க்கு உதயநிதி குடும்பம்  மின்சாரம் இல்லாமல் தூங்குமா? ’’

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு என்பதே இல்லை. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்ததுமே தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி, மின்தடைக்கு அணில் காரணம் என சொன்னதால் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார்.

’’இரவு 11க்கு உதயநிதி குடும்பம்  மின்சாரம் இல்லாமல் தூங்குமா? ’’

இந்தநிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில் சென்னை கோட்டூர்புரத்தில் மின் விநியோகம் மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வு கூட்டத்தில் அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில சுகாதாரத்துறை அமைச்சருமான மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

’’இரவு 11க்கு உதயநிதி குடும்பம்  மின்சாரம் இல்லாமல் தூங்குமா? ’’

இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், ’’அரைமணி நேரம் மின் விநியோகம் நின்று விட்டாலும் மின் பணியாளர்களுக்கு போன் செய்து தொல்லை கொடுக்கின்றனர். மக்களிடம் சகிப்பு தன்மை குறைந்துவிட்டது’’என்று சொன்னதால் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

‘’மக்களிடம் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டது. மின்வெட்டு ஏற்பட்டால் மக்கள் பொறுமை இல்லாமல் போன் செய்கிறார்கள் என்கிறார் திமுக அமைச்சர். இரவு 11க்கு உதயநிதி குடும்பம் மின்சாரம் இல்லாமல் தூங்குமா? மின் தடையைச் சரி செய்ய வக்கு இல்லை மக்கள் சகிப்புத் தன்மையைப் பற்றி கேள்வி எழுப்புகிறீர்? குழந்தை வைத்திருப்பவர்கள், நோயாளிகள், பெரியவர்களை வைத்திருக்கும் குடும்பம் இரவு நேரம் , மதியம் உச்சி வெயில் நேரம் மின் வெட்டு செய்தால் போன் செய்யாமல் என்ன செய்வார்கள் என்று நினைக்கிறார் அமைச்சர்?’’ என்று கேட்கிறார் மாரிதாஸ்

’’இரவு 11க்கு உதயநிதி குடும்பம்  மின்சாரம் இல்லாமல் தூங்குமா? ’’

மேலும், ‘’மின்சாரம் இல்லாமல் அமைச்சர் குடும்பம் தூங்குமா? மக்கள் கஷ்டம் என்னவென்றே தெரியாத சுகமான வாழ்வு வாழ்ந்த உதயநிதி குடும்பத்திற்கு என்ன தெரியும் இந்த மின் தடையால் மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள்? உதய நிதி குடும்பத்துக்குக் கஷ்டம் என்றால் அமைச்சருக்கு புரிந்திருக்கும். இது மக்கள் கஷ்டம் தானே புரியவில்லை போலும். அதனால் தான் மிக எளிமையாக மக்கள் சகிப்பு தன்மை பற்றி கேள்வி எழுப்புகிறது திமுக அமைச்சர் கூட்டம்’’ என்று கடுமையாக சாடியிருக்கிறார் மாரிதாஸ்.