ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

 

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

கோவை

கோவை அருகே ஆன்லைன் வகுப்பிற்கு பெற்றோர் செல்போன் வாங்கி தர மறுத்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவை என்.ஜி.ஜி.ஓ காலனி அசோகபுரத்தில் வசித்து வருபவர் பாண்டி. கூலி தொழிலாளி. இவரது மகன் அருள்செல்வம். இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா காரணமாக பள்ளி திறக்கப்படாததால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்துள்ளது.

ஆன்லைன் வகுப்பிற்கு செல்போன் வாங்கி தராததால் பிளஸ் 1 மாணவர் தற்கொலை!

இதனால், தனக்கு செல்போன் வாங்கித் தரும்படி பெற்றோரிடம், அருள்செல்வம் கேட்டு வந்துள்ளார். ஆனால் தற்போது பணம் இல்லாததால் பின்னர் வாங்கி தருவதாக பெற்றோர் சமாதானம் தெரிவித்து உள்ளனர். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அருள்செல்வம் நேற்று வீட்டின் சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவலின் பேரில் துடியலூர், போலீசார் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.