“11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு”.. பாட வாரியான தேர்ச்சி விகிதம் உள்ளே!

 

“11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு”.. பாட வாரியான தேர்ச்சி விகிதம் உள்ளே!

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதற்கு முன்னர், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. ஆனால் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி நடந்த வேதியியல், புவியியல், கணக்கு பதிவியல் ஆகிய பாடத்தேர்வுகளில் கலந்து கொள்ளாத 32 ஆயிரம் மாணவர்கள், அந்த தேர்வை எழுத மீண்டும் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனிடையே 11 ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெற்ற நிலையில், 10 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட போது 11 ஆம் வகுப்பு மீதமுள்ள தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.

“11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு”.. பாட வாரியான தேர்ச்சி விகிதம் உள்ளே!

இதனையடுத்து, மறுதேர்வு எழுதிய பிளஸ் 2 மாணவர்களின் தேர்வு முடிவுகள் மற்றும் பிளஸ் 1 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் தற்போது 11 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in என்ற இணையத்தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 ஆம் வகுப்பு தேர்வில் மாணவர்களை விட மாணவிகள் 3.11% கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் இயற்பியல்- 96.66%, வேதியியல்-99.95%, கணக்கு பதிவியல்- 98.16%, உயிரியல்- 97.64%, கணிதம்-98.56%, தாவரவியல்-93.78%, விலங்கியல்-94.53%, கணிதம்-98.56% ஆக தேர்ச்சி விகிதம் இருப்பதாகவும் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மேலும், 98.10% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் முதலிடத்திலும், 97.90% தேர்ச்சியுடன் விருதுநகர் இரண்டாம் இடத்திலும், 97.51% தேர்ச்சியுடன் கரூர் மாவட்டம் 3 ஆம் இடத்தையும் பிடித்துள்ளது.