கொரோனாவின் கோரதாண்டவம்… ஒரே நாளில் 1,185 பேர் மரணம்!

 

கொரோனாவின் கோரதாண்டவம்… ஒரே நாளில் 1,185 பேர் மரணம்!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவாக 2.17 லட்சம் பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாம் அலை பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையின் போது அதிகபட்சமாக நாளொன்றுக்கு 98 ஆயிரம் பேர் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது ஒரு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு 2 லட்சத்தை எட்டியுள்ளது. இவ்வாறு அதிவேகமாக பரவி வரும் கொரோனா பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர மாநில அரசுகள் அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இருப்பினும், பாதிப்பு கட்டுக்குள் வராமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

கொரோனாவின் கோரதாண்டவம்… ஒரே நாளில் 1,185 பேர் மரணம்!

இந்த நிலையில், இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 2,17,353 பேருக்கு கொரோனா உறுதியாகி இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,185 பேர் உயிரிழந்திருப்பதாகவும் 1,18,302 பேர் டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பி இருப்பதாகவும் 15,69,743 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 1,42,91,917 ஆக அதிகரித்துள்ளதாகவும் இதுவரை கொரோனாவில் இருந்து 1,25,47,866 பேர் குணமடைந்துள்ளதாகவும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,74,308 ஆக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் 1.84 லட்சமாக இருந்த கொரோனா பாதிப்பு நேற்று 2 லட்சமாக அதிகரித்தது. இன்று 2.17 லட்சமாக உயர்ந்துள்ளது. அதே போல, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.