• February
    26
    Wednesday

Main Area

Main



114 அடி இயேசு சிலைக்கு எதிர்ப்பு... கர்நாடகாவில் இந்து அமைப்புகள் போராட்டம்

கர்நாடகா
கர்நாடகா

கர்நாடகாவில் 114 அடி உயரத்துக்கு இயேசு சிலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டம் நடத்திவருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

christ

கர்நாடக மாநிலம் கனகபுராவில் 114 அடி உயர இயேசு சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டது. கனகபுராவில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மக்கள் தொகுதி எம்.எல்.ஏ-வும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்களுள் ஒருவருமான டி.கே.சிவகுமாரிடம் இந்த திட்டம் பற்றி கூறி உதவி கேட்டனர். அவரும் இதற்கான உதவியை செய்தார். அதிலிருந்து பிரச்னை வெடித்தது. காங்கிரஸ் கட்சிதான் திட்டமிட்டு இந்த சிலையை உருவாக்குகிறது என்று பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி அமைப்புக்கள் போர்க்கொடி தூக்கின.

rss

ஆனால், இந்த ஊரில் கிறிஸ்தவர்கள் பெருமளவு வசிக்கின்றனர். சுமார் 400 ஆண்டுகளாக அவர்கள் கிறிஸ்தவர்களாக உள்ளனர். தொகுதி எம்.எல்.ஏ என்ற வகையில் அவர்கள் கோரிக்கையை நிறைவேற்ற உதவுவது என் கடமை. நான் நூற்றுக்கணக்கான கோவில்கள் கட்ட உதவி உள்ளேன்... அப்போது எல்லாம் எதிர்ப்பு தெரிவிக்காத அவர்கள் இப்போது ஒரே ஒரு கிறிஸ்தவ சிலை எழுப்ப உதவியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்

jesus

என்று சிவக்குமார் கூறினார். ஆனால், இதை ஏற்க இந்து அமைப்புகள் மறுத்துவிட்டன. மேலும் இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என்ற இன்று கனகபுராவில் பல்லாயிரக் கணக்கான இந்து அமைப்புகள் போராட்டம் செய்தன. இந்தியாவில் பிறந்த ராமருக்கு கோவில் கட்ட காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவிக்கிறது... வெளிநாட்டில் பிறந்த இயேசுவுக்கு சிலை வைக்க துடிக்கிறது என்று இந்து அமைப்புக்கள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனால், அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.