சென்னை அசோக்நகர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த 11 மாணவிகள் மருத்துவர் படிப்பில் சேர தகுதி பெற்றிருக்கிறார்கள்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலமாக நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் நடந்த நீட் தேர்வில் அரசு மற்றும் அர்சு உதவிபெறூம் பள்ளி மாணவர்களில் 1,633 பேர் தேர்ச்சி பெற்றனர்.

நீட் தகுதி பெற்ற அரசுப்பள்ளியில் படித்த மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டு முதல் 7.5 சதவிகிதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, சென்னை அசோக்நகரில் படித்த 11 மாணவிகள் மருத்துவ படிப்பிற்கு தகுதி பெற்றுள்ளனர்.
இது குறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சரஸ்வதி, தமிழக அரசு வழங்கிய 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டினால் 11 மாணவிகள் மருத்துவ படிப்பில் சேர முடியும் என்ற நிலை வந்திருக்கிறது. இதற்கு காரணமாக, மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கிய முதல்வருக்கும் நன்றி தெரிவித்திருக்கிறார். மேலும், 11 மாணவிகளும் முதல்வருக்கு நன்றி தெரிவித்திருக்கின்றனர்.