110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

 

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

நெல் வயலில் வேலை செய்துகொண்டிருந்த 110 விவசாயிகளை மோட்டார் சைக்கிள்களில் ஆயுதம் ஏந்தி வந்த கும்பல் கடத்திக்கொண்டு போய் அவர்களின் கை,கால்களை கட்டிப்போட்டு கழுத்தறுத்து கொலை செய்துவிட்டதோடு மட்டுமல்லாமல், அந்த விவசாயிகளின் மனைவிகளையும் கடத்திக்கொண்டு போயிருக்கிறார்கள் பயங்கரவாதிகள். நைஜீரியாவின் போர்னோ மாநிலத்தில் நேற்று இந்த கொடுமை அரங்கேறி இருக்கிறது.

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

இந்த படுகொலைகளுக்கு இன்னும் யாரும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், போகோ ஹராம் அமைப்புதான் இந்த படுகொலைகளை செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

படுகொலை செய்யப்பட்ட 110 பேரின் உடல்களையும் போர்னே மாநிலத்தின் மைடுகுரி அருகே உள்ள கோஷோப் கிராமத்தில் ஒரே இடத்தில் இன்று அடக்கம் செய்தனர்.

போர்னோ மாலத்தில் நடந்த இந்த கொடூர தாக்குதலுக்கு ஐநா கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது. குற்றவாளிகளூக்கு கடும் தண்டனை வழங்க வேண்டுமென்றும், இனி இப்படி நிகழாதவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசுக்கு வலியுறுத்தி இருக்கிறது.

110 விவசாயிகள் கழுத்தறுத்து படுகொலை: நெல்வயலில் வேலை செய்தபோது நேர்ந்த கொடூரம்

விவேகமற்ற இந்த கொலைகளால் நாட்டு மக்களை கடும் வேதனைக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாக்கி இருக்கிறது என்று தெரிவித்துள்ளார் நைஜீரிய அதிபர் முஹம்மடு புஹாரி.

நைஜீரி்யாவில் ராணுவமும் அரசும் போகோ ஹாரம், ஐஎஸ் பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதனால் இரு தரப்பினருக்கும் இடையிலான மோதலில், அப்பாவி மக்களும் பலியாகி வருவது தொடர்கதையாக இருக்கிறது.

அரசுக்கு ஆதரவாக இருப்பதாகவும், அரசுக்கு தங்களை பற்றிய தகவல்கள் கொடுப்பதாகவும் சந்தேகித்து இப்படி அப்பாவிகளை வேட்டையாடி வருகிறார்கள் பயங்கரவாதிகள்.