கண்ணாடியை உடைத்ததால் தந்தை திட்டுவார் என்ற பயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சிறுவன்!

சென்னையில் 6ம் வகுப்பு படிக்கும் 11 வயது பள்ளி மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை பெத்தேல் நகரை சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் தஷ்வந்த(11). இவர் அப்பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை பெற்றோர் வேலைக்கு சென்று விட்டனர். தஷ்வந்தும் அவரது தம்பியும் வீட்டில் விளையாடிய போது எதிர்பாராத விதமாக பிரிட்ஜின் உள்ளே இருந்த கண்ணாடி உடைந்துள்ளது.

இது தந்தைக்கு தெரிந்தால் திட்டுவார் என்ற பயத்தில் தஷ்வந்த் வீட்டில் இருந்த நைலான் கயிற்றால் பேன் கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த நீலாங்கரை போலீசார் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக ராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிறுவனின் தற்கொலை குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Most Popular

கேரள நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 28 பேர் ஆக அதிகரிப்பு

கேரளா: மூணாறு அருகே ராஜமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டி முடி பகுதியில் உள்ள கண்ணன் தேவன் டீ எஸ்டேட் தேயிலைத்...

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த்

நீலகிரியில் கனமழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி மாவட்டத்தில் கடந்த 5 நாட்களுக்கும் மேலாக தொடர்...

“சொப்னா வழியே சிறந்த வழி” -என தங்க கடத்தலின் சொர்க்கபூமியாக மாறிய கேரளா -தொடரும் பல கடத்தல்கள்..

கேரளா மாநிலம் கண்ணூர் சர்வதேச விமான நிலையத்தில் கிட்டத்தட்ட ஒரு கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரள தங்க ஊழல் பற்றிய விசாரணை தீவிரமாக நடந்து வரும் வேளையில் , சொப்னா வழியில்,...

கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்!

பிரபல பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளார். இத்தகவலை அவர் தன் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் பாலிவுட் சூப்பர்...