“பகலிலேயே வருவோம் ,கூட்டத்திலேயே நுழைவோம்” -சிறுவர்கள் மூலம் வங்கியில் திருடும் கும்பல்

 

“பகலிலேயே வருவோம் ,கூட்டத்திலேயே நுழைவோம்” -சிறுவர்கள் மூலம் வங்கியில் திருடும் கும்பல்

ஒரு வங்கியில் பட்ட பகலில் , கூட்ட நெரிசலில் 11 வயது சிறுவன் மூலம் ஒரு கும்பல் 20 லட்ச ரூபாய் பணத்தை கொள்ள்ளையடித்து சென்றுள்ள சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையுண்டு பண்ணியுள்ளது.

“பகலிலேயே வருவோம் ,கூட்டத்திலேயே நுழைவோம்” -சிறுவர்கள் மூலம் வங்கியில் திருடும் கும்பல்

ஹரியானா மாநிலம் ஜிந்தில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஒரு கிளையில் ஒரு 11 வயது சிறுவன் மூலம் ஒரு கூட்டம் ரூ .20 லட்சம் திருடியுள்ளது . அந்த வங்கி கிளையில் நுழைந்த சிறுவன்,வங்கி ஊழியர்களிடம் தன் மீது எந்த சந்தேகமும் வராமல் ஒரு மூட்டை பணத்துடன் தப்பிச் சென்றுள்ளான் .

மனோவர் மற்றும் ரவீந்தர் என்ற அந்த இரண்டு சிறுவர்கள் சம்பவம் நடந்த அன்று ,ஜிந்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சி ஆபீசுக்கு முன்னால் அமைந்துள்ள பி.என்.பி கிளைக்குள் நுழைந்தார்கள் . அப்போது அவர்கள் காசாளர் தனது அறையை விட்டு வெளியேறிம் வரை காத்திருந்தனர் .சிறிது நேரம் கழித்து காசாளர் வெளியேறியபோது ​​11 வயது சிறுவன் அவரின் அறைக்கு உள்ளே நுழைந்து, அவர் வைத்திருந்த பண மூட்டைகளை எடுத்துச் சென்றுள்ளான்
அன்று மாலையில், வங்கி ஊழியர்கள் ,அன்று வசூலான பணத்தை எண்ணி பார்த்தனர் . அப்போது அவர்கள் கணக்கில் ரூ .20 லட்சம் குறைவதை கண்டறிந்தனர் .பிறகு ,சி.சி.டி.வி காட்சிகளை பரிசோதித்தபோது, ​​11 வயது சிறுவன் பணத்துடன் வங்கியில் இருந்து வெளியேறுவதை பார்த்து அதிர்ச்சியுற்று , போலீசாருக்கு தகவல் கொடுத்தனர் .

போலீஸ் விசாரணையில் அந்த சிறுவன் தலா ரூ .5 லட்சம் கொண்ட நான்கு மூட்டைகளை திருடி தப்பி ஓடிவிட்டதாக வங்கி மேலாளர் விஸ்வஜித் சின்ஹா ​​தெரிவித்தார். சம்பவம் நடந்த நாளில் வங்கியில் கூட்டம் இருந்ததால், காசாளர் வெளியேறும்போது தனது அறையை பூட்ட மறந்துவிட்டார் என்றும் ,
மேலும் அவர் வாஷ்ரூமுக்குச் செல்வதற்கு முன்பு தனது அறையை பூட்டியிருக்க வேண்டும் என்று கூறினார். இந்த வழக்கு குறித்து போலீசார் அந்த இடத்தை பார்வையிட்டு விசாரணையைத் தொடங்கினர்.

“பகலிலேயே வருவோம் ,கூட்டத்திலேயே நுழைவோம்” -சிறுவர்கள் மூலம் வங்கியில் திருடும் கும்பல்