• March
    28
    Saturday

Main Area

Main



நாடாளுமன்றத்திற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த சிறுமி!

 Bailey Nielsen
Bailey Nielsen

அமெரிக்க நாடாளுமன்றத்திற்குள் 11 வயது சிறுமி ஒருவர், கையில் துப்பாக்கியுடன் நுழைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Bailey Nielsen என்ற 11 வயது சிறுமி போய்ஸ் என்ற பகுதியிலுள்ள நாடாளுமன்றத்திற்குள் குண்டுகள் நிரப்பப்பட்ட AR-15 வகை துப்பாக்கியுடன் நுழைந்தாள். இதனைப்பார்த்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். நாடாளுமன்றத்தில் முன் மொழியப்பட்டுள்ள துப்பாக்கி சட்டத்திற்கு தனது ஆதரவைத் தெரிவிப்பதற்காகவும், தன்னால் ஒரு துப்பாக்கியை பொறுப்பான முறையில் பயன்படுத்தமுடியும் என்பதை நிரூபிப்பதற்காகவும், துப்பாக்கியுடன் தான் வந்ததாக Bailey Nielsen தெரிவிக்கிறார்.

 AR-15 rifle

தனக்கு 5 வயதாக இருக்கும்போதிலிருந்தே துப்பாக்கியை எப்படி பயன்படுத்துவது என்பதை கற்றுக்கொண்டதாக தெரிவித்த அவர், தற்காப்புக்காக துப்பாக்கி வைத்திருப்பதை பலரும் வரவேற்பதாகவும், அனைவரும் துப்பாக்கி வைத்திருக்கும் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றும் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

2018 TopTamilNews. All rights reserved.