ஈரோட்டில் மூதாட்டியிடம் நூதன முறையில் 11 சவரன் நகை கொள்ளை!

 

ஈரோட்டில் மூதாட்டியிடம் நூதன முறையில் 11 சவரன் நகை கொள்ளை!

ஈரோடு

ஈரோட்டில் சாலையில் நடந்துசென்ற மூதாட்டியிடம் போலீசார் என கூறி நூதன முறையில் 11 சவரன் தங்க நகையை, மர்மநபர்கள் திருடி சென்றனர்.

ஈரோடு நல்லாம்பட்டியை சேர்ந்தவர் சென்னியப்பன். இவரது மனைவி சரஸ்வதி (65). சென்னியப்பன் உடல்நல குறைவு காரணமாக, ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருடன் சரஸ்வதியும் துணைக்கு இருந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை சரஸ்வதி மருத்துவமனை அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த 2 பேர், மூதாட்டியிடம் தங்களை போலீசார் என்றும், மப்ட்டியில் வந்துள்ளதாகவும் கூறி அறிமுகம் செய்துள்ளனர்.

ஈரோட்டில் மூதாட்டியிடம் நூதன முறையில் 11 சவரன் நகை கொள்ளை!

பின்னர், இவ்வளவு நகைகளை கழுத்தில் அணிந்து சென்றால் பாதுகாப்பு இருக்காது என்று கூறிய அந்த இளைஞர்கள், அதனை பர்சில் வைத்துக் கொள்ளுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளனர். மேலும், சரஸ்வதி அணிந்திருந்த 11 சவரன் தங்க நகைகளை வாங்கி பர்சில் வைப்பது போல் பாசாங்கு செய்து, பின்னர் சரஸ்வதியிடம் பர்சை கொடுத்து விட்டு அங்கிருந்து வேகமாக சென்றுவிட்டனர்.

சிறிது தூரம் சென்று பர்சை பார்த்தபோது, அதில் நகைகள் இல்லாததை கண்டு சரஸ்வதி அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அவர், உடனடியாக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மூதாட்டியிடம் நூதன முறையில் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.