ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பம்!

 

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பம்!

ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி அரசுக்கு எதிராக ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று தி.மு.க. தரப்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுகுறித்து திமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிமன்றம் 11 எம்எல்ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய முடியாது என்று கூறியது. இதனை எதிர்த்து திமுக சார்பில் கொறடா சக்கரபாணி, தங்க தமிழ்செல்வன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர்

ஓபிஎஸ் உட்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்க கோரும் வழக்கில் புதிய திருப்பம்!

11 எம்.எல்.ஏ.க்கள் மீது புகார் அளித்த 6 பேருக்கு 7 நாட்களுக்குள் பதிலளிக்க சட்டப்பேரவை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அப்போதைய எம்.எல்.ஏ.க்கள் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன்,பார்த்திபனுக்கு பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.