11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு… சபாநாயகர் முடிவெடுக்காதது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

 

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு… சபாநாயகர் முடிவெடுக்காதது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

அ.தி.மு.க அரசுக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கில் சபாநாயகர் ஏன் இன்னும் முடிவெடுக்காமல் உள்ளார் என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

11 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு… சபாநாயகர் முடிவெடுக்காதது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்விஓ.பன்னீர்செல்வம் பதவி பறிக்கப்பட்ட பிறகு சசிகலா முதல்வராக முயற்சி செய்தார். சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை வரவே சசிகலா முயற்சி பலிக்கவில்லை. இதனால் எடப்பாடி பழனிசாமியை தமிழக முதல்வராக ஆக்கிவிட்டு சிறைக்கு சென்றார் சசிகலா. இதை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அப்போது கொரடா உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ-க்கள் வாக்களித்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தனர். இந்த நிலையில் டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் பதவியை பறித்த சபாநாயகர் தனபால், இந்த 11 எம்.எல்.ஏ-க்கள் பற்றி கண்டுகொள்ளவில்லை என்று தி.மு.க சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கு விசாரணை நீண்டுகொண்டே செல்கிறது. மணிப்பூர் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அடிப்படையில் தி.மு.க புதிதாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தது. இந்த நிலையில் இன்று நடந்த விசாரணையின்போது 11 எம்.எல்.ஏ-க்கள் விவகாரத்தில் சபாநாயகர் தன்னுடைய முடிவை அறிவிக்கலாம் என்று கூறியிருந்தும் இதுவரை ஏன் முடிவெடுக்காமல் இருக்கிறார், இந்த விவகாரத்தில் சபாநாயகர் உடனடியாக செயல்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி பாப்டே அறிவுறுத்தினார். மேலும், வழக்கு விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்தார்.