அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 11 பேர் காயம்!

 

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  11 பேர் காயம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இதுவரை 11 பேர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  11 பேர் காயம்!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர், துணை முதல்வர் இன்று தொடங்கி வைத்தனர். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டுக்கு பெயர் போன அவினியாபுரம், பாலமேடு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அந்த வகையில் இன்று உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 655 காளைகள் 700 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில்  11 பேர் காயம்!

இந்நிலையில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு முதல் சுற்றில் காளைகள் 84 பங்கேற்ற நிலையில் மாடுபிடி வீரர்கள் 75 பேர் பங்கேற்றனர். இதில் 11 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அங்கு தயாராக நிற்கவைக்கப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த வீரர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. அத்துடன் அடுத்த சுற்றிற்கு 3 வீரர்கள் தேர்வாகியுள்ளனர்.