11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

 

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

பிலவ வருடம் I சித்திரை 28 I செவ்வாய் கிழமை I மே 11, 2021

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

10-05-2021 இன்றைய ராசி பலன்!

மேஷம்

இன்று நீங்கள் அமைதியுடன் ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டிய நாள். உணர்ச்சி வசப்படுவதன் மூலம் உங்கள் பிரியமானவர்களிடம் சரியான முறையில் தகவலை பரிமாறத் தவறுவீர்கள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. உங்கள் கீழ் பணிபுரிவோருடன் மோதல்கள் ஏற்டலாம். கவனமாக இருக்க வேண்டியது அவசியம். இன்று நீங்கள் உங்கள் துணையாருடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். இது உறவை பாதிக்கும். இன்று அதிகமான செலவினங்கள் ஏற்படும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

ரிஷபம்

உங்கள் முயற்சியில் தாமதங்களை எதிர்கொள்வீர்கள். வெற்றி பெறுவதற்கு நல்ல திட்டமிடல் தேவை. தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். பணியிடத்தில் வேலை அதிகமாக இருக்கும். தவறுகள் நேராமல் இருப்பதற்கு கவனமாக வேலை செய்ய வேண்டும். இன்று பண இழப்புகள் காணப்படுகின்றன. உங்கள் அலட்சிய மனப்பான்மை பண இழப்பிற்கு வழிவகுக்கும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

மிதுனம்

பொறுமையின்மை மற்றும் உறுதியின்மை காரணமாக நீங்கள் முன்னேற இயலாது. இதனால் பதட்டமான சூழ்நிலை காணப்படும். இந்தச் சூழ்நிலையை சமாளிக்க உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்துங்கள். உத்தியோக சூழ்நிலை இன்று உங்களுக்கு சாதகமாக இல்லை. சக பணியாளர்களிடம் கவனமாகப் பழகவும். அவர்களால் பிரச்சினைகள் நேரலாம். குடும்ப பிரச்சினைகள் காரணமாக சில தொல்லைகள் ஏற்படும். உணர்ச்சிவசப்படுவதை தவிர்த்து விடுங்கள். செலவுகள் மலை போல் குவியும். இன்று நிதிநிலைமையை சமாளிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

கடகம்

உங்கள் உறுதியும் தைரியமும் நல்ல விளைவுகளை உருவாக்கும். திறமையான தகவல் பரிமாற்றத்தின் மூலம் நீங்கள் மிகுந்த பலனடைவீர்கள். பணியில் உங்கள் திறமைகளை காட்டுவீர்கள். ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். உங்கள் செயலுக்காக பாராட்டை பெறுவீர்கள். இன்று உங்கள் துணையிடம் அன்பை வெளிப்படுத்துவீர்கள். சிறந்த மற்றும் ஆழமான புரிந்துணர்வை ஏற்படுத்த அது உதவும். இன்று நிதிநிலைமை மிகவும் பிரகாசமாக இருக்கிறது.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

சிம்மம்

இன்று நீங்கள் வெறுமையையும் பாதுகாப்பாற்ற தன்மையையும் உணர்வீர்கள். எந்தவொரு விஷயத்தையும் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இலேசாக எடுத்துக் கொள்ளுங்கள். வேலையில் பிரகாசிப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது. உங்கள் திறமைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும். இன்று அன்யோன்யமும் அன்பும் அதிகமாக காணப்படும். உங்கள் கடின உழைப்பினால் நீங்கள் இன்று கணிசமாக பணம் சம்பாதிக்க முடியும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

கன்னி

உங்கள் முக்கியமான விஷயங்களைக் கூட இன்று சரியான நேரத்தில் முடிப்பதில் தாமதம் ஏற்படும். முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு இன்றைய நாள் ஏற்புடையதல்ல. வேலைச் சுமை அதிகமாக இருக்கும். இன்று பணவரவு குறைந்து காணப்படும். எனினும் பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியம் நல்ல முறையில் இருக்காது. தொண்டை சம்பந்தமான தொற்று நோயால் பாதிக்கப்படலாம்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

துலாம்

இன்றைய நாள் உங்களுக்கு முக்கியமான இலட்சியங்களை அடைவதற்கு நல்ல வாய்ப்புடன் கூடிய பிரகாசமான நாள். உங்கள் எதிர்பார்ப்பைக் காட்டிலும் அதிக நல்ல பலன்கள் கிட்டும். முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். அதிகமான வேலைப்பளு உங்களை ஆக்கிரமித்து உங்களை பிஸியாக வைத்திருக்கும். அதிகப்படியான வேலை காரணமாக பணியில் தவறுகள் நேரலாம். இன்றைய அதிகப்படி பணவரவால் உங்களின் சேமிப்பு உயரும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

விருச்சிகம்

இன்று உங்களுக்கு மிகவும் சாதகமான நாள். நீங்கள் எதிர்பாராத வெற்றிகள் உங்களுக்கு ஆழ்ந்த திருப்தியை உண்டாக்கும். விருந்தாளிகளின் வருகை மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொடுக்கும். குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பே நீங்கள் உங்கள் பணிகளை திறம்பட முடிப்பீர்கள். உங்கள் வேலை சம்பந்தமாக நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். இன்று நிதிநிலைமை திருப்திகரமாக இருக்கும். பணத்தை உங்களால் சேமிக்க இயலும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

தனுசு

இன்று உங்கள் செயல்களில் கவனம் தேவை. முடிவெடுப்பதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களுக்கு உற்சாகமான வாய்ப்புகள் கிடைக்கும். அலுவலகச் சூழல் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். நீங்கள் மகிழ்ச்சியுடன் பணியாற்றுவீர்கள்.பணவரவு குறைந்து காணப்படும். இழப்பு ஏற்டா வண்ணம் பணத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும் மற்றும் சேமிக்க வேண்டும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

மகரம்

இன்று நீங்கள் வெற்றி பெறுவதற்கு உங்கள் புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். பணியிடத்தில் மேலதிகாரியுடன் சண்டைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்கள் மனதை அமைதியாக வைத்திருங்கள். மேலதிகாரியை அனுசரித்து நடந்துகொள்ளுங்கள். இன்று தேவையற்ற செலவினங்கள் ஏற்படும். அதிகரிக்கும் செலவினங்கள் கவலையைத் தரும். மன அழுத்தங்கள் உங்கள் ஆரோக்கியத்தை பாதிக்கும். மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

கும்பம்

இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். மனஉறுதி மூலம் இன்று நீங்கள் உங்கள் முயற்சியில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகள் மற்றும் உறுதி நேர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். பணியில் சிறந்த வளர்ச்சி காணப்படும். புதிய வாய்ப்புகள் கிடைக்கும். அந்த வாய்ப்புகள் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கும். பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். கிடைக்கும் அதிகப்படி பணத்தை உங்களால் சேமிக்க முடியும்.

11-05-2021 தினப்பலன் – செலவுகள் அதிகரிக்கும் நாள்

மீனம்

இன்று உங்களிடம் காணப்படும் தாழ்வு மனப்பான்மை காரணமாக சிறிது அவநம்பிக்கையோடு காணப்படுவீர்கள். உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. இதனால் மேலதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாவீர்கள். உங்கள் சக பணியாளர்கள் குறித்த நேரத்தில் பணிகளை முடிப்பார்கள். இதனால் உங்களுக்கு கவலை ஏற்படும். உங்களின் இனிமையான பேச்சால் உங்கள் துணையை மகிழ்விப்பீர்கள். அதிகரிக்கும் செலவினங்கள் காணப்படும். அதனால் சேமிப்பு குறைந்து காணப்படும்.