11 மாவட்டங்களில் இன்றுமுதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

 

11 மாவட்டங்களில் இன்றுமுதல் கனமழை: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக நேற்று முன்தினம் முதல் தமிழகத்தில் பரவலாக மழை பேசியது வருகிறது. தற்போது காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது.  இதனால் தமிழகத்தின் 11 மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக  இன்று முதல் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

rain

திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ஈரோடு,சேலம்,தேனி, நெல்லை, கோவை , நீலகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, ஆகிய 11 மாவட்டங்களில்  கனமழை பெய்யும் என்றும் சென்னையை பொறுத்தவரை ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. 

rain

மத்திய வங்கக்கடல் மற்றும் அதையொட்டிய  தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை   உருவாகி  உள்ளதால், நாளை மற்றும் நாளை  மறுநாள் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிட்டுள்ளது.