11 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் நிர்மலா தேவி!

 

11 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமினில் வெளியே வந்தார் நிர்மலா தேவி!

கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்

மதுரை: கல்லூரி மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்த புகாரில் கைதான பேராசிரியர் நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் வழிநடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஆண்டு ஏப்ரல் 16-ம் தேதி கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். சிபிசிஐடி காவல் நிறைவடைந்து, மதுரை சிறையில் நிர்மலா தேவி அடைக்கப்பட்டிருந்தார்.

nirmala devi

இந்த வழக்கில் நிர்மலா தேவி அடுத்தடுத்து தாக்கல் செய்த ஜாமீன் மனுக்கள் அனைத்தும் நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. இதனிடையே, நிர்மலா தேவி வழக்கில் உயரதிகாரிகள் என கூறப்படுவோரிடம் உரிய விசாரணை நடத்தப்படவில்லை, சிபிசிஐடி விசாரணையில் திருப்தி இல்லை என கோரி அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்ற வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்த மாதர் சங்கத்தினர், ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிர்மலா தேவி வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் கோரியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ் சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, நிர்மலா தேவியை சந்திக்கவோ, அவருக்குத் தேவையான சட்ட உதவிகளை வழங்கவோ இயலவில்லை என அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். மேலும், அவரது ஜாமீன் மனுவை இந்த நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

nirmala devi

இதையடுத்து, நிர்மலா தேவியிடம் விசாரணை நடத்த அவரை நேரில் ஆஜர்படுத்த நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி, நிர்மலா தேவி நீதிமன்றத்தின் முன்பு கடந்த 12-ம் தேதி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, வழக்கு தொடர்பாக செய்தியாளர்களை சந்திக்க கூடாது என்பன உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து அவருக்கு ஜாமீன் வழங்கியது.

nirmala devi

ஆனாலும், நிர்மலா தேவியின் உறவினர்கள் யாரும் அவருக்கு ஜாமின் கையெழுத்து போட முன்வராததால், அவரால் சிறையிலிருந்து வெளிவர முடியாத நிலை ஏற்பட்டது. அதன்பின்னர், நிர்மலா தேவியின் சகோதரர் மற்றும் குடும்ப நண்பர் ஒருவர் ஜாமின் கொடுத்து கையெழுத்திட்டனர். இதனால், நீதிமன்றம் இவருக்கு ஜாமீன் வழங்குவதாக அறிவித்தது.

இதையடுத்து, சுமார் 11 மாதங்கள் சிறையில் இருந்த நிர்மலா தேவி ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.